செவ்வாய், 25 அக்டோபர், 2016

நெட்டில் கசிந்த பைரவா வீடியோ அதிர்ச்சியில் படக்குழு

நெட்டில் கசிந்த பைரவா வீடியோ
அதிர்ச்சியில் படக்குழு

அக்டோபர், 25, 2016
பைரவா படத்தில் விஜய், கீர்த்தி டூயட் பாடி ஆடுவதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. விஜய், கீர்த்தி டூயட் பாடல்காட்சிகளை படமாக்க படக்குழு சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளது.
அங்கு உள்ள சாலையில் விஜய்யும், கீர்த்தியும் நடனமாடுவதை படப்பிடிப்பை பார்க்க வந்த யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
அந்த வீடியோ சமூக வலதைளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. வீடியோ கசிவால் படக்குழுவினர் தான் பாவம் அதிர்ச்சியில் உள்ளார்களாம். படக்குழுவினர் பாடலை காட்சியாக்குவதில் கவனமாக இருந்தபோது அந்த வாய்ப்பை பயன்படுத்தி யாரோ சேட்டை செய்துள்ளனர்.
பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும்! - அமெரிக்க விநியோகஸ்தர்
விஜய் நடித்து வரும் பைரவா படத்தை அமெரிக்காவில் மூன்று நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
தெறி படம் அமெரிக்காவில் நல்ல வசூலை ஈட்டியதால், பைரவா வுக்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பி அன்ட் பி, 8 கே மைல்ஸ் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. தெறியை விட அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியுள்ளனராம்.
ரஜினி நடிக்காத ஒரு படத்தின் அமெரிக்க உரிமை இந்த அளவுக்கு விலை போயிருக்கிறதென்றால் அது விஜய்யின் பைரவாதான் என்கிறார் 8 கே மைல்ஸ் நிறுவனத்தின் சுரேஷ் சாரி.
விஜய் படங்களின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் சுரேஷ் சாரி.

முழு செய்திகளுக்கு........

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

திங்கள், 5 ஜனவரி, 2015

“ மைதிலி & கோ “

“ மைதிலி & கோ “
 உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில் வீரு இயக்கும் “ மைதிலி & கோ “


சென்னை, 05-01-2015,
கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மைதிலி & கோ” இந்த படத்தின் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். இவர் 2011 ல் நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.
மற்றும் இந்த படத்தில் பாண்டியராஜன், சுமன், துப்பாக்கி படத்தில் ஒரு வில்லனாக நடித்த ஜாகீர்உசேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சி.ராம் / கலை - பாப்ஜி
ஸ்டன்ட் - மாஸ்மாதா / பாடல்கள் - சினேகன், இந்து
வசனம் - வேலுமணி / நடனம் - பிரேம்ரஷித்
எடிட்டிங் - ரகு
இசை, இயக்கம் - வீரு.கே
தயாரிப்பு - கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட்.
படம் பற்றி இயக்குனர் வீரு.கே கூறியது....
                                                                                                              மேலும், . . .  .
 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பிப்ரவரி, 21-02-2014,

பிப்ரவரி, 21-02-2014,
சென்னை, பிப்ரவரி, 21-02-2014,
கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு”
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன்,சேரன்ராஜ்,விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கலை - பாலா
இசை - எஸ்.வி.ஜி
பாடல்கள் - முத்துலிங்கம், பழனிபாரதி, கலைக்குமார், மோகன்ராஜ், ராஜசேகர்.
நடனம் - சிவசங்கர், ரவிதேவ், ராதிகா, சிவாஜி
ஸ்டன்ட் - ஆக்ஷன் பிரகாஷ்
எடிட்டிங் - கே.எம்.கே.பழனிவேல்
தயாரிப்பு மேற்பார்வை - பிரேம் நசீர்
தயாரிப்பு - கே.சண்முகம்
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் சி.ராஜசேகர்
படம்பற்றி இயக்குனர்......
மலையூர் மம்பட்டியான்,சீவலப்பேரி பாண்டி,போன்ற வட்டார மக்களிடம் பேரும், புகழும் பெற்ற நிஜ ஹீரோக்களின் வரிசையில் வீரன் முத்துராக்குவும் ஒருவன். சிவகங்கை மாவட்டத்தில் ஆவாரங்காடு பகுதியில் வாழ்ந்த ஒருவனின் கதையை அடிப்படையாக வைத்து கொஞ்சம் காதலை கலந்தேன்.கதாநாயகனின் சிலம்பாட்ட கலையை சேர்த்து காதல் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்.
அச்சன்குளம் – ஆலங்குளம் என்ற இரண்டு கிராமத்து மக்களிடையே உள்ள ஆக்ரோஷமான கோபம் எப்படிப்பட்டது என்பது தான் “வீரன்முத்துராக்கு” இது முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்து என்கிறார் இயக்குனர் சி.ராஜசேகர்.