ஞாயிறு, 23 நவம்பர், 2008

"கடற்கரை' படத்தில் ருசிகர காட்சி 10 காசுக்கு ஒரு முத்தம்!




கல்லூரிகளில் மாணவர்களுக்குள் `கோட் வேர்டு' என்று சொல்லப்படும் பரிபாஷைகள் உண்டு. ஒரு பெண்கள் கல்லூரியில், `பத்து காசு' என்று ஒரு சங்கேத வார்த்தை பிரபலம். அந்த கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி, `சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரை காதலிக்கிறாள். காதலனை சந்திக்க, தோழியுடன் செல்கிறாள்.
காதலர்களை தனிமையில் சந்திக்கவிட்டு விலகி நின்ற தோழி, ``அந்த பத்து காசை மறக்காமல் கேட்டு வாங்கிக்கடீ'' என்று சிரித்தபடி சொன்னாள்.
அதன்படி காதலி தன் காதலனிடம், ``எனக்கு பத்து காசு கொட்ஜ்ங்க'' என்று கேட்கிறாள். ``அதென்ன பத்து காசு?'' என்று காதலன் புரியாமல் விழிக்க- அவன் கன்னத்தில் அவள், `பச்சக்' என்று ஒரு முத்தம் கொடுத்து, ``இதுதான் அந்த பத்து காசு'' என்று சொல்லி சிரிக்கிறாள்.
இன்ப அதிர்ச்சி அடைந்த காதலன், விழி பிதுங்கி நிற்கிறான்.
இப்படி ஒரு காட்சி, `கடற்கரை' படத்துக்காக படமாக்கப்பட்டது. இதில் காதலனாக புதுமுகம் எஸ்.ஏ.உதய், காதலியாக நிவேதா ஆகிய இருவரும் நடித்தார்கள். கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, `டிஷ்ம்' சோமன் டைரக்டு செய்தார். இந்த படத்தை மில்லியோ பிக்சர்ஸ் சார்பில் கனடா மில்லியோ தயாரிக்கிறார்.
காதலும், மர்மமும் கலந்த திகில் கதை இது.

கருத்துகள் இல்லை: