வியாழன், 13 நவம்பர், 2008

ஆனந்தபுரத்து வீடு


தமிழ் பட உலகுக்கு பல பிரமாண்டமான படங்களை அளித்த டைரக்டர் ஷங்கர், ஒரு தயாரிப்பாளராக, மற்ற டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து படங்களை தயாரித்தும் வருகிறார். `காதல்,' `வெயில்,' `இம்சை அரசன் 23-ம் புலிகேசி' போன்ற படங்கள், அவருடைய `எஸ் பிக்சர்ஸ்' சார்பில் தயாரானவை.
அடுத்து `எஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் புதிய படத்துக்கு, `ஆனந்தபுரத்து வீடு' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
மர்மதேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய நாகா, இந்த படத்தின் கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார். சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக வித்தியாசமான கதைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய நாகா, இயக்கும் முதல் படம் இது.
இதில், கதாநாயகனாக நந்தா நடிக்கிறார். கதாநாயகி, சாயாசிங். இவர்களுடன் கிருஷ்ணா, கலைராணி, மற்றும் புதுமுகங்கள் நடிக்க, `ஆரியன்' என்ற மூன்று வயது சுட்டிக்குழந்தை முக்கிய வேடத்தில் அறிமுகம் ஆகிறான்.
அமெரிக்காவில், எம்.எப்.ஏ. பயின்ற அருண்மணிபழனி, இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். ரமேஷ்கிருஷ்ணா என்ற புதிய இசையமைப்பாளர், இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். படத்தின் திரைக் கதையை நாகா, இந்திரா சவுந்தரராஜன், சரத் ஆகிய மூன்று பேரும் அமைத்து இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு, கேரளாவில் தொடங்கியது. தொடர்ந்து மூணாறு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: