வியாழன், 13 நவம்பர், 2008

‘பேட்டைமுதல் கோட்டைவரை'அடுத்து சத்யராஜ் நடிக்கும் படத்தின் பெயர்தான் 'பேட்டைமுதல் கோட்டைவரை'
தங்கர்பச்சான் இயக்கும் 'தொலைந்து போனவர்கள்' படத்தில் நடிப்பவர், 'பேட்டைமுதல் கோட்டைவரை' என்ற படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இதில் சத்யராஜூடன் நெப்போலியனும், நாசரும் நடிக்கிறார்கள். எம். ஜமீன்ராஜ் படத்தை இயக்குகிறார். தேவா இசையமைக்கிறார்.
வரும் பதினெட்டாம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த வருட தொடக்கத்தில் தங்கர்பச்சான் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.
நல்ல கதையம்சம் உள்ள படம் வந்தால் மட்டும் நடித்தால் போதும் என்று அவருக்கு அவரே கட்டு்பாடு போட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: