வெள்ளி, 14 நவம்பர், 2008

ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் "எல்லாம் அவன் செயல்"


தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம், `கரகாட்டக்காரன்.' இந்த படத்தை தயாரித்த கருமாரி கந்தசாமி-ஜே.துரை ஆகிய இருவரும் நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் தயாரிக்கிறார்கள்.
ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் உருவாகும் இந்த படத்துக்கு, `எல்லாம் அவன் செயல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
`வாழ்த்துக்கள்,' `தூண்டில்' ஆகிய படங்களில் நடித்த ஆர்.கே, இந்த படத்தில் சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் துணிச்சல்மிக்க வக்கீலாக நடிக்கிறார்.
கதாநாயகியாக மலையாள நடிகை பாமா அறிமுகம் ஆகிறார். மும்பையை சேர்ந்த 9 மாடல் அழகிகளும் பங்கு பெறுகிறார்கள்.
வண்டு முருகன் என்ற நகைச்சுவை வக்கீல் வேடத்தில், வடிவேல் நடிக்கிறார். கோர்ட்டுக்கு வரும் குற்றவாளிகளை தனது வாத திறமையால் நிரபராதிகளாக்கி வெளியே அனுப்பி, அவர்களிடமே சிக்கி சின்னாபின்னப்படும் பாத்திரத்தில் வடிவேல் வருகிறார்.
மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், மணிவண்ணன், விசு, மனோஜ் கே.ஜெயன், தலைவாசல் விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரகுவரன், கடைசியாக நடித்த படம் இதுதான். ரோஜா, சுகன்யா ஆகிய இருவரும் முக்கிய வேடங்கள் ஏற்றுள்ளனர்.
சென்னை, விசாகப்பட்டினம், எர்ணாகுளம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது

கருத்துகள் இல்லை: