வியாழன், 4 டிசம்பர், 2008

விமான நிலையம் மூடப்பட்டதால் நடிகை திரிஷா பாங்காக்கில் தவிப்புசென்னை, டிச.5-
பாங்காக் விமான நிலையம் மூடப்பட்டதால், நடிகை திரிஷா சென்னை திரும்ப முடியாமல் தாய்லாந்தில் தவித்தார்.

தாய்லாந்து நாட்டில் பிரதமராக இருக்கும் சோம்சாய் முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். பாங்காக் விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டார்கள்.
அதைத்தொடர்ந்து பாங்காக் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்து எந்த விமானமும் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லவில்லை.
இந்த விவரம் தெரியாமல், திரிஷா நடிக்கும் `கிங்' என்ற தெலுங்கு படப்பிடிப்பு குழு, அங்கு படப்பிடிப்பு நடத்தியது. அந்த படத்தில் நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சீனு ஒயிட்லா டைரக்டு செய்கிறார்.


படப்பிடிப்பு பாங்காக்கில் உள்ள `கிரபி ஐலண்ட்' என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரிஷா, நாகார்ஜுன், டைரக்டர் சீனு ஒயிட்லா ஆகிய மூவரும் இந்தியா திரும்புவதற்காக பாங்காக் விமான நிலையத்துக்கு வந்தார்கள்.
அப்போதுதான் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் 3 பேரும் தவித்தார்கள். அவர்களை திரும்பி செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டார்கள்.

இந்த சம்பவம் பற்றி நடிகை திரிஷா, நிருபரிடம் கூறியதாவது:-
``பாங்காக்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் விமான நிலையம் மூடப்பட்ட விவரம் எங்களுக்கு தெரியாது. அந்த தகவலை பாங்காக் போலீசார் எங்களிடம் சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் பாங்காக் நகருக்கு திரும்பிப்போய், அங்கிருந்து கார் மூலம் புக்கட் தீவுக்கு வந்தேன். புக்கட்டில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தேன்.''
இவ்வாறு திரிஷா கூறினார்.

கருத்துகள் இல்லை: