ஞாயிறு, 7 டிசம்பர், 2008

லிங்குசாமி படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்லிங்குசாமி இயக்கும் `பையா' படத்தில் இருந்து நீக்கியதால் ஆத்திரத்தில் இருக்கிறார் நயன்தாரா...இதில் கார்த்தி ஜோடியாக நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டது. படப்பிடிப்பு ஒரிரு நாளில் துவங்க இருந்தது.
இதற்கிடையில் நயன்தாராவை கழற்றி விட்டுள்ளனர். லிங்குசாமியின் தம்பி போஸ் இப்படத்தின் தயாரிப்பாளர். நயன்தாராவை அவர் தொடர்பு கொண்டு சம்பளத்தை குறைக்காவிட்டால் படத்தை எடுக்க முடியாது என்று கறாராக கூறியதால் கோபமான நயன்தாரா அப்படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார். சம்பளத்தை 75 லட்சமாக குறைத்துக்கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தப்பட்டதாம். ஏற்கனவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகையை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். இன்று, அல்லது நாளை தயாரிப்பாளருக்கு இப்பணம் அனுப்பி வைக்கப்படும் என்று நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் இந்த மோதல் சம்பந்தமாக இதுவரை புகார் அளிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி சம்பளத்தை குறைத்தது தயாரிப்பாளரின் தவறு என்கிறது நயன்தாரா வட்டாரம். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தால் அதை சந்திப்பேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். ஒப்பந்தத்தை மீறாமல் படம் எடுத்தால் அதில் நடிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
நயன்தாராவுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. திரிஷாவிடம் இது குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இந்த படத்தினால் நயன்தாரா இரண்டு பெரிய பட வாய்ப்புகளை இழந்துள்ளார். இதனால் அவருக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புதுப்படங்களும் அவர் கைவசம் இல்லை.

கருத்துகள் இல்லை: