வெள்ளி, 19 டிசம்பர், 2008

`குமரிப்பெண்ணின் உள்ளத்திலே' - பெயரில் ஒரு புதிய படம்.!.எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்து பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், `குமரிப்பெண்ணின் உள்ளத்திலே.' நீண்ட பல வருடங்களுக்குப்பின் இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.

பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் காதலிக்கிறார்கள். அதே ஊரில் உள்ள ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த மாணவியை அடைய துடிக்கிறார். இதனால் ஏற்படும் சிக்கல்களை கதை சித்தரிக்கிறது.

புதுமுகங்கள் சந்துரு-சிப்பி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் மீராவாசுதேவன், சீதா, நாசர், பொன்னம்பலம், செந்தில், குமரிமுத்து, முத்துக்காளை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்வதுடன், போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார், கிஷோர். விசாக் மூவீஸ் சார்பில் கிரிஜா, ஆகாஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: