சனி, 20 டிசம்பர், 2008

ஜோதிர்மயி நடித்த ‘அடையாளங்கள்’ படத்துக்கு விருது!.


சென்னை, டிச.21:
ஜோதிர்மயி நடித்த மலையாள படத்துக்கு ஆசிய விருது கிடைத்துள்ளது.

ஜோதிர்மயி மலையாளத்தில் நடித்த படம் ‘அடையாளங்கள்’. இதை எம்.ஜி.சசி இயக்கி இருந்தார். 1940 களில் வாழ்ந்த மலையாள எழுத்தாளர் ஒருவரின் கதை இது.

அவரது காதலியாக ஜோதிர்மயி நடித்திருந்தார். இந்த படத்துக்கு திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் ‘நெட் பேக்’ என்ற ஆசிய விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஜோதிர்மயி கூறும்போது, ‘இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். 75 ஆண்டுக்கு முன் ஒரு மலையாளப் பெண் எப்படி இருந்திருப்பாள் என்பதை உணர்ந்து நடித்த படம். இந்த படத்தில் நான் மட்டும்தான் பழைய முகம். ஹீரோ உட்பட அனைவரும் புதுமுகம்’ என்றார்.

கருத்துகள் இல்லை: