செவ்வாய், 23 டிசம்பர், 2008

கிசு கிசு!.,கிசு கிசு!.,கிசு கிசு!.. .

கல்யாணத்தில் இணையும் ஜோடி!

`விஷ்' என்று உச்சத்துக்குப்போன மூன்றெழுத்து கதாநாயகனுக்கும், `நம்பர்-1' நீயா, நானா? என்ற போட்டியில் உள்ள மூன்றெழுத்து நடிகைக்கும் இடையே அரும்பிய காதல் கனிந்து, கல்யாணத்தில் முடியும் நிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கும் படம் திரைக்கு வந்ததும், திருமண பத்திரிகை கொடுக்க இருக்கிறார்களாம்!


`கல்லூரி' நாயகி சம்பளம், ரூ.60 லட்சம்!

`நயன' நடிகை நடிக்க இருந்த படத்தில் `கல்லூரி' நாயகி நடிக்கிறார் அல்லவா? இந்த படத்துக்காக `கல்லூரி' நாயகிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம், ரூ.60 லட்சமாம்! இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அடுத்த படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்க முடிவு செய்து இருக்கிறாராம், `கல்லூரி' நாயகி!


`ராய்' நடிகையின் சினேகிதர்கள்!

`ராய்' நடிகைக்கு `விளையாட்டு' நண்பர் தவிர, இன்னொரு நண்பரும் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர். `ராய்'க்கு விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை பரிசாக கொடுப்பவர், அந்த வெளிநாட்டு நண்பர்தான். சமீபத்தில் அவர் கொடுத்த பரிசு கார்.

ஒரு நடிகையின் காதல் விளையாட்டு!

இளம் டைரக்டர்களின் மனதில் காதல் ஆசையை தூண்டிவிட்டு, பிறகு ஏமாற்றி அவர்களை தாடி வளர்க்க வைத்து பார்த்து ரசிப்பதை, `மோ...கா' என்ற நடிகை பொழுதுபோக்காக வைத்து இருக்கிறார். இவருடைய காதல் விளையாட்டில் சிக்கி, சின்னாபின்னமாகிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதாம்!

கருத்துகள் இல்லை: