வியாழன், 25 டிசம்பர், 2008

காட்பாடியில் `எந்திரன்' படப்பிடிப்பு!. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடித்தனர்
காட்பாடி, டிச.26-

நடிகர் ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு வேலூரை அடுத்த காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படத்தை டைரக்டர் ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்தது.

இந்த படத்தின் சில காட்சிகளை படம் பிடிப்பதற்காக டைரக்டர் ஷங்கர் தலைமையிலான படக்குழுவினர் நேற்று அதிகாலை வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்குள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினர். இதை தொடர்ந்து, நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தும், நடிகை ஐஸ்வர்யாராயும் தனி தனிக்கார்களில் வேலூர் வந்தனர். பின்னர், அவர்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


நேற்று காலை டெக்னாலஜி டவரில் படிப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் ஆகியோர் வேலூர் வருகை தந்துள்ளது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ரஜினியை காண ரசிகர்களும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு விட்டால் படப்பிடிப்புக்கு இடைïறு ஏற்படுவதுடன், போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் வரும் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: