சனி, 27 டிசம்பர், 2008

டைரக்டர் ஷங்கர் தயாரிக்கும் புதிய படம், `ஈரம்'


காதல், வெயில், இம்சை அரசன் என மாறுபட்ட கதையம்சங்களை தயாரித்த பட நிறு வனம், டைரக்டர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட கதையம் சம் கொண்ட `ஈரம்' என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது.

இதில், `மிருகம்' பட கதாநாயகன் ஆதி, நந்தா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கி றார்கள். இவர்களுக்கு ஜோடியாக சிந்துமேனன், சரண்யா மோகன் ஆகிய இருவரும் நடிக்க, மற்ற நடிகர்-நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு, படப் பிடிப்பு நடைபெறுகிறது.

முதல்கட்டமாக, அடுக்கு மாடி குடியிருப்பு போன்ற பிரமாண்டமான அரங்கம் அமைக் கப்பட்டு, அதில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இதையடுத்து திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது.

முழுக்க முழுக்க கதை, கதாபாத்திரங்கள், தொழில்நுட்பம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய் கிரார், அறிவழகன். இவர், டைரக்டர் ஷங்கரிடம் `பாய்ஸ்,' `அந்நியன்' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, சிறந்த குறும் படத்தை இயக்கியதற்காக தங்கப்பதக்கம் பெற்றவர்.

இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் திரைக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டு இருக்கி றார்கள்.

கருத்துகள் இல்லை: