சனி, 27 டிசம்பர், 2008

பிரசாந்த் - மீராஜாஸ்மின் ஜோடியுடன் மீண்டும் மலையூர் மம்பட்டியான்

நடிகர் தியாகராஜன் நடித்து வெற்றி பெற்ற `மலையூர் மம்பட்டியான்' படம், `மம்பட்டியான்' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது.

தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடத்தில், பிரசாந்த் நடிக்கிறார். சரிதா நடித்த வேடத்தில், பிரசாந்த் ஜோடியாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். ஜெயமாலினி நடித்த வேடத்தில், முமைத்கான் நடிக்கிறார். ஜெய்சங்கர் நடித்த டி.எஸ்.பி. ரஞ்சித் வேடத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். `சின்ன பண்ணை சீனாதானா'வாக வடிவேல் நடிக்கிறார்.

போலி மம்பட்டியானாக கலாபவன்மணி நடிக்க, ராஜேஷ், கோட்டா சீனிவாசராவ், விஜய குமார், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, சங்கராபரணம் ராஜலட்சுமி, கலைராணி, `மானாட மயிலாட' புகழ் கணேஷ் ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரனின் மகன் அருண் ராஜேந்திரன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், கலை, டைரக்ஷன் பொறுப்புகளை தியாகராஜன் ஏற்றுள்ளார். லட்சுமி ஷாந்தி மூவீஸ் சார்பில் படத்தை தியாகராஜனே தயாரிக்கிறார்.

அழகிய மலைபிரதேசங்களும், அடர்ந்த காடுகளும் நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: