செவ்வாய், 13 ஜனவரி, 2009

"சற்றுமுன் கிடைத்த தகவல்" - 75 சதவீத படம் முடிவடைந்தபின் டைரக்டர் மாற்றப்பட்டார்!250 படங்களுக்கும் மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த கனல் கண்ணன் கதையின் நாயகனாக, மனநோயாளி வேடத்தில் நடிக்கும் படம், "சற்றுமுன் கிடைத்த தகவல்". இந்த படத்தை முதலில் தக்காளி சீனிவாசன் டைரக்டு செய்தார். 75 சதவீத படம் முடிவடைந்த நிலையில், இந்த படத்தில் இருந்து தக்காளி சீனிவாசன் மாற்றப்பட்டார்.

அவர் டைரக்டு செய்த காட்சிகளை ஒரு ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சில மாற்றங் களுடன் அதே கதை புதிதாக படமாகி வருகிறது. தக்காளி சீனிவாசனுக்கு பதில் புவன கண்ணன் டைரக்டு செய்து வருகிறார்.

பெண்கள் பாலின பலாத்காரம் செய்யப்படுவதை கருவாக கொண்ட கதை இது. இதில், `அம்முவாகிய நான்' படத்தின் கதாநாயகி பாரதி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார். ஒரு டாக்டர் வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் போலீஸ் அதி காரியாக நடிக்கிறார்.

டி.பி.கஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரி பாஸ்கர் தயாரிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இம்மாதம் இறுதியில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: