செவ்வாய், 25 அக்டோபர், 2016

நெட்டில் கசிந்த பைரவா வீடியோ அதிர்ச்சியில் படக்குழு

நெட்டில் கசிந்த பைரவா வீடியோ
அதிர்ச்சியில் படக்குழு

அக்டோபர், 25, 2016
பைரவா படத்தில் விஜய், கீர்த்தி டூயட் பாடி ஆடுவதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. விஜய், கீர்த்தி டூயட் பாடல்காட்சிகளை படமாக்க படக்குழு சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளது.
அங்கு உள்ள சாலையில் விஜய்யும், கீர்த்தியும் நடனமாடுவதை படப்பிடிப்பை பார்க்க வந்த யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
அந்த வீடியோ சமூக வலதைளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. வீடியோ கசிவால் படக்குழுவினர் தான் பாவம் அதிர்ச்சியில் உள்ளார்களாம். படக்குழுவினர் பாடலை காட்சியாக்குவதில் கவனமாக இருந்தபோது அந்த வாய்ப்பை பயன்படுத்தி யாரோ சேட்டை செய்துள்ளனர்.
பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும்! - அமெரிக்க விநியோகஸ்தர்
விஜய் நடித்து வரும் பைரவா படத்தை அமெரிக்காவில் மூன்று நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
தெறி படம் அமெரிக்காவில் நல்ல வசூலை ஈட்டியதால், பைரவா வுக்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பி அன்ட் பி, 8 கே மைல்ஸ் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. தெறியை விட அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியுள்ளனராம்.
ரஜினி நடிக்காத ஒரு படத்தின் அமெரிக்க உரிமை இந்த அளவுக்கு விலை போயிருக்கிறதென்றால் அது விஜய்யின் பைரவாதான் என்கிறார் 8 கே மைல்ஸ் நிறுவனத்தின் சுரேஷ் சாரி.
விஜய் படங்களின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் சுரேஷ் சாரி.

முழு செய்திகளுக்கு........

கருத்துகள் இல்லை: