செவ்வாய், 16 டிசம்பர், 2008

"சரோஜாதேவியுடன் நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது'' ரஜினிகாந்த் ருசிகர பேச்சு






சென்னை, டிச.17-

சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:-


சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் என்னை நெருங்க விட்டு இருக்க மாட்டார்கள்.

சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

"நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது"- தமன்னா.











சென்னை, டிச.15:




"லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது" என்றார் தமன்னா.
லிங்குசாமியின் "பையா" படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்தார். அதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டது. திடீரென்று சம்பளத்தை குறைக்கச் சொல்லி லிங்குசாமி தரப்பில் கேட்கப்பட்டது.
அதை ஏற்காமல் படத்திலிருந்து விலகினார் நயன்தாரா. இதையடுத்து தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது, "இதுவரை இப்படத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது. படத்திலிருந்து ஹீரோயின் விலகுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். எனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஏற்ற வேடங்களில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டி போடுகிறேன்" என்றார்.

செவ்வாய், 9 டிசம்பர், 2008

பட அதிபரிடம் `கேரவன்' கேட்டு தகராறு செய்த கதாநாயகன்


"சினிமா படப்பிடிப்பின்போது `கேரவன்' கேட்டு பட அதிபரிடம் ஒரு புது கதாநாயகன் தகராறு செய்தார்.
`வைகை' என்ற புதிய படத்தில், பாலா என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர், `மானாட மயிலாட' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றவர். இவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து, `வைகை' படத்தில் நடிக்க வைத்தார்கள்.
படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் வரை அமைதியாக நடித்து வந்த பாலா, தனக்கு `கேரவன்' வேண்டும் என்று பட அதிபரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்.
பட அதிபர் குமரன் உடனே ஒரு கேரவனுக்கு ஏற்பாடு செய்தார். கேரவன் வந்தபின், ``என்னை தவிர வேறு யாரும் அந்த கேரவனை பயன்படுத்தக்கூடாது'' என்று பாலா கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது
.

இதனால் தயாரிப்பாளர் குமரனுக்கும், கதாநாயகன் பாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ``நான் இந்த படத்தில் நடிக்க முடியாது'' என்று சொல்லிவிட்டு, பாலா சென்னை திரும்ப முயற்சித்தார்.
இதுபற்றி பட அதிபர் குமரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் பாலாவிடம் விசாரணை நடத்தினார்கள். ``எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறக் கூடாது. படத்தை சுமூகமாக முடித்து கொடுத்த பிறகுதான் சென்னைக்கு வரவேண்டும்'' என்று பாலாவிடம் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து பாலா, நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பட அதிபர் குமரன் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார். அவரை நடிகர் சங்க நிர்வாகிகள் சமாதானப்படுத்தி, `வைகை' படத்தில் நடித்து முடிக்கும்படி அறிவுரை வழங்கினார்கள்.

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

மும்பை ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்த நடிகை





மும்பையின் கவர்ச்சி தாரகை ராக்கி சவந்த். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அரைகுறை ஆடையில் சென்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் இவர் அதை பற்றி கண்டு கொள்வதில்லை.
இவர் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். கௌபாணி வகை பேண்ட், டைட்டான சட்டை அணிந்து சென்ற இவரை நேரில் கண்ட இன்ப அதிர்ச்சியில் ஓட்டல் ஊழியர்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ராக்கியை விழுந்து விழுந்து கவனித்துள்ளனர். அப்போது ஒரு ஊழியர் மட்டும் ஆர்வ மிகுதியில் ராக்கியை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதைக்கண்ட ராக்கிசவந்த் அவர் அருகில் சென்று என்னை மட்டும் ஏன் போட்டோ எடுக்கிறீர்கள்? நாம் இருவருமே சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாமே என கூறியதோடு அந்த ஊழியரின் தோளில் தனது கையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம்.
இதைப்பார்த்த மற்ற ஊழியர்கள் ராக்கியிடம் நாங்களும் உங்களுடன் சென்று போட்டோ எடுக்க ஆசைப்படுகிறோம் என கூறியுள்ளனர்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வரிசையாக ஒவவொருவருடன் நின்று தோளில் கை போட்டபடி மட்டுமல்லாமல் கட்டி அணைத்தபடி, முத்தம் கொடுத்தபடி என விதவிதமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்தாராம் ராக்கி.
ஒட்டு மொத்தத்தில் அன்றைய தினம் ஓட்டலுக்கு விருந்துக்கு சென்ற ராக்கி சவந்த் ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி படைத்து கலக்கினாராம்.

லிங்குசாமி படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்







லிங்குசாமி இயக்கும் `பையா' படத்தில் இருந்து நீக்கியதால் ஆத்திரத்தில் இருக்கிறார் நயன்தாரா...இதில் கார்த்தி ஜோடியாக நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டது. படப்பிடிப்பு ஒரிரு நாளில் துவங்க இருந்தது.
இதற்கிடையில் நயன்தாராவை கழற்றி விட்டுள்ளனர். லிங்குசாமியின் தம்பி போஸ் இப்படத்தின் தயாரிப்பாளர். நயன்தாராவை அவர் தொடர்பு கொண்டு சம்பளத்தை குறைக்காவிட்டால் படத்தை எடுக்க முடியாது என்று கறாராக கூறியதால் கோபமான நயன்தாரா அப்படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார். சம்பளத்தை 75 லட்சமாக குறைத்துக்கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தப்பட்டதாம். ஏற்கனவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகையை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். இன்று, அல்லது நாளை தயாரிப்பாளருக்கு இப்பணம் அனுப்பி வைக்கப்படும் என்று நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் இந்த மோதல் சம்பந்தமாக இதுவரை புகார் அளிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி சம்பளத்தை குறைத்தது தயாரிப்பாளரின் தவறு என்கிறது நயன்தாரா வட்டாரம். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தால் அதை சந்திப்பேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். ஒப்பந்தத்தை மீறாமல் படம் எடுத்தால் அதில் நடிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
நயன்தாராவுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. திரிஷாவிடம் இது குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இந்த படத்தினால் நயன்தாரா இரண்டு பெரிய பட வாய்ப்புகளை இழந்துள்ளார். இதனால் அவருக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புதுப்படங்களும் அவர் கைவசம் இல்லை.

சனி, 6 டிசம்பர், 2008

தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்ய குழு அறிவிப்பு








சென்னை, டிச.6-
தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும்; 2006-2007 மற்றும் 2007-2008ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்ட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்ய தேர்வுக்குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பார்.

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான், திரைப்பட நடிகர்கள் வாகை சந்திரசேகர், சாருஹாசன், திரைப்பட இயக்குநர் பி.அமிர்தம், திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் நடராஜன், இசை அமைப்பாளர் தேவா, திரைப்பட நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், குமரி முத்து, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




வியாழன், 4 டிசம்பர், 2008

விமான நிலையம் மூடப்பட்டதால் நடிகை திரிஷா பாங்காக்கில் தவிப்பு







சென்னை, டிச.5-
பாங்காக் விமான நிலையம் மூடப்பட்டதால், நடிகை திரிஷா சென்னை திரும்ப முடியாமல் தாய்லாந்தில் தவித்தார்.

தாய்லாந்து நாட்டில் பிரதமராக இருக்கும் சோம்சாய் முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். பாங்காக் விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டார்கள்.
அதைத்தொடர்ந்து பாங்காக் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்து எந்த விமானமும் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லவில்லை.
இந்த விவரம் தெரியாமல், திரிஷா நடிக்கும் `கிங்' என்ற தெலுங்கு படப்பிடிப்பு குழு, அங்கு படப்பிடிப்பு நடத்தியது. அந்த படத்தில் நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சீனு ஒயிட்லா டைரக்டு செய்கிறார்.


படப்பிடிப்பு பாங்காக்கில் உள்ள `கிரபி ஐலண்ட்' என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரிஷா, நாகார்ஜுன், டைரக்டர் சீனு ஒயிட்லா ஆகிய மூவரும் இந்தியா திரும்புவதற்காக பாங்காக் விமான நிலையத்துக்கு வந்தார்கள்.
அப்போதுதான் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் 3 பேரும் தவித்தார்கள். அவர்களை திரும்பி செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டார்கள்.

இந்த சம்பவம் பற்றி நடிகை திரிஷா, நிருபரிடம் கூறியதாவது:-
``பாங்காக்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் விமான நிலையம் மூடப்பட்ட விவரம் எங்களுக்கு தெரியாது. அந்த தகவலை பாங்காக் போலீசார் எங்களிடம் சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் பாங்காக் நகருக்கு திரும்பிப்போய், அங்கிருந்து கார் மூலம் புக்கட் தீவுக்கு வந்தேன். புக்கட்டில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தேன்.''
இவ்வாறு திரிஷா கூறினார்.