திரைப்படச் செய்திகள் அறிய கீழே "க்ளிக்" செய்யவும்
Kanavu Thozhil Salai-Tamil Cinema Fortnightly Magazine
புதன், 11 மார்ச், 2009
புதன், 11 பிப்ரவரி, 2009
லாரா தத்தாவின் கவர்ச்சி போஸ்









நடிகை லாரா தத்தா கவர்ச்சி போஸ் கொடுத்து அசத்தியிருக்கும் விவகாரம்தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்! மேக்ஸிம் என்ற பேஷன் இதழின் அட்டையில் இடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், அமீஷா பட்டில், ஸ்ரேயா உள்ளிட்டவர்களை தொடர்ந்து லாரா தத்தா மேக்ஸிமில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது பில்லு பார்பர் படத்தில் நடித்து வரும் லாரா, மேக்ஸிம் இதழுக்காக கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். பிப்ரவரி மாத இதழ் அட்டை மற்றும் உள் பக்கங்களில் லாராவின் கவர்ச்சி தோற்றம் பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009
ஷாம்லி தெலுங்கில், கதாநாயகி ஆனார்!
செவ்வாய், 13 ஜனவரி, 2009
"சற்றுமுன் கிடைத்த தகவல்" - 75 சதவீத படம் முடிவடைந்தபின் டைரக்டர் மாற்றப்பட்டார்!






250 படங்களுக்கும் மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த கனல் கண்ணன் கதையின் நாயகனாக, மனநோயாளி வேடத்தில் நடிக்கும் படம், "சற்றுமுன் கிடைத்த தகவல்". இந்த படத்தை முதலில் தக்காளி சீனிவாசன் டைரக்டு செய்தார். 75 சதவீத படம் முடிவடைந்த நிலையில், இந்த படத்தில் இருந்து தக்காளி சீனிவாசன் மாற்றப்பட்டார்.
அவர் டைரக்டு செய்த காட்சிகளை ஒரு ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சில மாற்றங் களுடன் அதே கதை புதிதாக படமாகி வருகிறது. தக்காளி சீனிவாசனுக்கு பதில் புவன கண்ணன் டைரக்டு செய்து வருகிறார்.
பெண்கள் பாலின பலாத்காரம் செய்யப்படுவதை கருவாக கொண்ட கதை இது. இதில், `அம்முவாகிய நான்' படத்தின் கதாநாயகி பாரதி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார். ஒரு டாக்டர் வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் போலீஸ் அதி காரியாக நடிக்கிறார்.
டி.பி.கஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரி பாஸ்கர் தயாரிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இம்மாதம் இறுதியில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
லேபிள்கள்:
சற்றுமுன் கிடைத்த தகவல்,
தக்காளி சீனிவாசன்
வியாழன், 1 ஜனவரி, 2009
நயன்தாராவின் படு கவர்ச்சி நடிப்பில் "துபாய்ராணி".





நடிகை நயன்தாரா பில்லா படத்துக்கு முன்பு தெலுங்கில்தான் படு கவர்ச்சியாக நடித்து வந்தார். தற்போது நயனுக்கு தமிழில் நம்பர் ஒன் இடம் கிடைத்திருப்பதால் அவர் தெலுங்கில் செம கிளாமராக நடித்த 2 படங்களை தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதில் ஒன்று துபாய் சீனு. இந்த படத்தை தமிழில் துபாய் ராணி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியிடவிருக்கிறார்கள்.
படத்தில் நயன்தாராவின் ஜோடியாக நடித்திருப்பவர் ரவி தேஜா. நயன்தாராவின் கவர்ச்சியையே பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்கிறார் துபாய் ராணி படக்குழுவினர்.
அதேபோல நயன்தாராவின் கடு கவர்ச்சி நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கை போடு போட்ட யோகி படமும் தமிழில் முரட்டுத்தம்பி என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
லேபிள்கள்:
துபாய் ராணி,
நயன்தாரா,
முரட்டுத்தம்பி
திங்கள், 29 டிசம்பர், 2008
நீச்சல் உடையில் வந்த நமீதா !.



அஜீத்குமார், நயன்தாரா, நமீதா நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் வெளிவந்த `பில்லா' படம், இப்போது தெலுங்கில் அதே பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை குணசேகர் டைரக்டு செய்கிறார்.
அஜீத்குமார் நடித்த வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். நமீதா நடித்த வேடத்தில் அவரே நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அதையடுத்து விசாகப்பட்டினத்தில் இப்போது படப்பிடிப்பு நடைபெறுகிறது.
நமீதா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அவர் நீச்சல் உடையில் வரும் காட்சிகள் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் படமாக்கப்பட்டன.
நீச்சல் உடையில் நமீதா வருவதை படப்பிடிப்பு குழுவினரே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். நீச்சல் உடையில் அவர் கவர்ச்சியாக நடந்து வருவதையும், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி உட்கார்ந்திருப்பதையும், கண்கொட்டாமல் பார்த்தார்கள்.
இதை கவனித்த நமீதா, படப்பிடிப்பு குழுவினர் வேடிக்கை பார்ப்பதை எப்படி தவிர்க்கலாம்? என்று யோசிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பில் பணிபுரியும் ஆண்கள் தன்னை பார்த்து ரசிக்கவும் கூடாது... அதே சமயம் அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்துகொள்ளக்கூடாது...அதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அதன்படி, நீச்சல் உடை அணிந்து கொண்டு காமிராவை நோக்கி அவர் வரும்போதெல்லாம், ``அண்ணா, எல்லோரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்'' என்று தெலுங்கில் தமாசாக சொன்னார். உடனே படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்கள். நமீதாவின் சங்கோஜத்தை புரிந்து கொண்டு அவரை வேடிக்கை பார்ப்பதை தவிர்த்தார்கள்.
நமீதா சம்பந்தப்பட்ட நீச்சல் உடை காட்சிகளை படமாக்கி முடித்தபின், அனுஷ்கா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளை படமாக்க ஆரம்பித்தார்கள்.
படப்பிடிப்பு குழுவினர், ``நமக்கு இன்று டபுள் பேட்டா'' என்று தங்களுக்குள் தமாசாக சொல்லிக்கொண்டார்கள்.
சனி, 27 டிசம்பர், 2008
பிரசாந்த் - மீராஜாஸ்மின் ஜோடியுடன் மீண்டும் மலையூர் மம்பட்டியான்


நடிகர் தியாகராஜன் நடித்து வெற்றி பெற்ற `மலையூர் மம்பட்டியான்' படம், `மம்பட்டியான்' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது.
தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடத்தில், பிரசாந்த் நடிக்கிறார். சரிதா நடித்த வேடத்தில், பிரசாந்த் ஜோடியாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். ஜெயமாலினி நடித்த வேடத்தில், முமைத்கான் நடிக்கிறார். ஜெய்சங்கர் நடித்த டி.எஸ்.பி. ரஞ்சித் வேடத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். `சின்ன பண்ணை சீனாதானா'வாக வடிவேல் நடிக்கிறார்.
போலி மம்பட்டியானாக கலாபவன்மணி நடிக்க, ராஜேஷ், கோட்டா சீனிவாசராவ், விஜய குமார், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, சங்கராபரணம் ராஜலட்சுமி, கலைராணி, `மானாட மயிலாட' புகழ் கணேஷ் ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரனின் மகன் அருண் ராஜேந்திரன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், கலை, டைரக்ஷன் பொறுப்புகளை தியாகராஜன் ஏற்றுள்ளார். லட்சுமி ஷாந்தி மூவீஸ் சார்பில் படத்தை தியாகராஜனே தயாரிக்கிறார்.
அழகிய மலைபிரதேசங்களும், அடர்ந்த காடுகளும் நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
லேபிள்கள்:
பிரசாந்த்,
மலையூர் மம்பட்டியான்,
மீராஜாஸ்மின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



