செவ்வாய், 18 நவம்பர், 2008

`திருவண்ணாமலை' படத்துக்காக 150 சாமியார்கள் நடித்த பாடல் காட்சி


கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்க, பேரரசு டைரக்டு செய்து வரும் `திருவண்ணாமலை,' ஆன்மீகம் கலந்த அதிரடி சண்டை படம்.
கதாநாயகன் அர்ஜுன், உள்ளூரில் `சேனல்' நடத்துபவர். தனது சேனலில் நல்ல விஷயங்களை ஒளிபரப்பி, முக்கிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறார். இதனால் அவர் ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அந்த பிரச்சினையில் இருந்து அவர் எப்படி வெளிவருகிறார்? என்பதே கதை.
அர்ஜுன், சிவலிங்கத்தை கையில் ஏந்தியபடி, நூற்றுக்கணக்கான சாமியார்கள் மத்தியில் பாடி வருவது போல் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது.
``உலகை ஆளும் ஈசனே'' என்று தொடங்கும் அந்த பாடல் காட்சியில், திருவண்ணாமலையில் உள்ள அசல் சாமியார்களை நடிக்க வைக்க முடிவு செய்தார்கள்.
முதலில் மறுத்த சாமியார்கள், பாடலை கேட்டபின், அதில் நடிக்க சம்மதித்தார்கள். அந்த பாடல் காட்சியில் 150 சாமியார்கள் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் நடித்தார்கள். அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. படம், அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.

கருத்துகள் இல்லை: