ஞாயிறு, 23 நவம்பர், 2008

பவித்ரன் இயக்கும் `மாட்டுத்தாவணி'க்காக 100 நடன கலைஞர்களுடன் ஒரு பாடல் காட்சி!


வசந்தகால பறவைகள், சூரியன், ஐ லவ் இந்தியா உள்பட பல படங்களை டைரக்டு செய்த பவித்ரன் இப்போது, `மாட்டுத்தாவணி' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
இந்த படத்துக்காக,
``அண்ணன்மாரே...தம்பிமாரே...அம்மாமாரே...அய்யாமாரே...கல்லூரி மாணவன் பன்னீரின் கதையை கேளுங்க...'' என்ற பாடலை, முதல்-அமைச்சர் கருணா நிதியின் மகன் மு.க.முத்து சொந்த குரலில் பாடினார். தேவா இசையில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டது.
அநியாயமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு, தூக்கு கயிறுக்கு அடியில் நிற்கும் கதா நாயகனை காப்பாற்றுவதற்காக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்களிலும், லாரி களிலும் திரண்டு வந்து போராடுவது போல் இந்த பாடல் காட்சி படமானது.
ஏவி.எம்.ஸ்டூடியோவின் 4-வது அரங்கில் 100 நடன கலைஞர்கள் உணர்ச்சிகரமாக ஆடுவது போலவும் அந்த பாடல் காட்சி படமானது. 4 காமிராக்கள் மூலம் இந்த பாடல் காட்சியை ஒளிப்பதிவாளர் ஸ்ரீகணேசன் படமாக்கினார். இத்துடன், `மாட்டுத்தாவணி' படப்பிடிப்பு முடிவடைந்தது.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை டாக்டர் பி.விஜயகுமார் தயாரிக்கிறார்.

கருத்துகள் இல்லை: