சனி, 6 டிசம்பர், 2008

தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்ய குழு அறிவிப்பு
சென்னை, டிச.6-
தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும்; 2006-2007 மற்றும் 2007-2008ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்ட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்ய தேர்வுக்குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பார்.

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான், திரைப்பட நடிகர்கள் வாகை சந்திரசேகர், சாருஹாசன், திரைப்பட இயக்குநர் பி.அமிர்தம், திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் நடராஜன், இசை அமைப்பாளர் தேவா, திரைப்பட நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், குமரி முத்து, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை: