ஞாயிறு, 21 டிசம்பர், 2008

"காந்தி'' பட டைரக்டர் ஆட்டன்பரோ உடல் நிலை கவலைக்கிடம்!.
லண்டன், டிச.22-

காந்தி பற்றிய படம் எடுத்த டைரக்டர் லார்டு ரிச்சர்டு ஆட்டன்பாரோ, தன் வீட்டில் கடந்த வாரம் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டதால் அவர் சுயநினைவு இழந்தார். அவர் கோமாவில் விழுந்தார். உடனடியாக அவர் தென்மேற்கு லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இவர் கடந்த 1982-ம் ஆண்டு இயக்கிய காந்தி படத்துக்காக சிறந்த படம் மற்றும் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.

அவர் நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். நடிகராகவும், டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். இப்போது அவருக்கு வயது 85 ஆகும்.

கருத்துகள் இல்லை: