திங்கள், 29 டிசம்பர், 2008

நீச்சல் உடையில் வந்த நமீதா !.

அஜீத்குமார், நயன்தாரா, நமீதா நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் வெளிவந்த `பில்லா' படம், இப்போது தெலுங்கில் அதே பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை குணசேகர் டைரக்டு செய்கிறார்.

அஜீத்குமார் நடித்த வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். நமீதா நடித்த வேடத்தில் அவரே நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அதையடுத்து விசாகப்பட்டினத்தில் இப்போது படப்பிடிப்பு நடைபெறுகிறது.
நமீதா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அவர் நீச்சல் உடையில் வரும் காட்சிகள் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் படமாக்கப்பட்டன.

நீச்சல் உடையில் நமீதா வருவதை படப்பிடிப்பு குழுவினரே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். நீச்சல் உடையில் அவர் கவர்ச்சியாக நடந்து வருவதையும், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி உட்கார்ந்திருப்பதையும், கண்கொட்டாமல் பார்த்தார்கள்.

இதை கவனித்த நமீதா, படப்பிடிப்பு குழுவினர் வேடிக்கை பார்ப்பதை எப்படி தவிர்க்கலாம்? என்று யோசிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பில் பணிபுரியும் ஆண்கள் தன்னை பார்த்து ரசிக்கவும் கூடாது... அதே சமயம் அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்துகொள்ளக்கூடாது...அதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதன்படி, நீச்சல் உடை அணிந்து கொண்டு காமிராவை நோக்கி அவர் வரும்போதெல்லாம், ``அண்ணா, எல்லோரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்'' என்று தெலுங்கில் தமாசாக சொன்னார். உடனே படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்கள். நமீதாவின் சங்கோஜத்தை புரிந்து கொண்டு அவரை வேடிக்கை பார்ப்பதை தவிர்த்தார்கள்.

நமீதா சம்பந்தப்பட்ட நீச்சல் உடை காட்சிகளை படமாக்கி முடித்தபின், அனுஷ்கா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளை படமாக்க ஆரம்பித்தார்கள்.

படப்பிடிப்பு குழுவினர், ``நமக்கு இன்று டபுள் பேட்டா'' என்று தங்களுக்குள் தமாசாக சொல்லிக்கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: